டாபர் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ஹேர் ரீடைலர் பொருட்களால் கருப்பை புற்றுநோய் அபாயம்; அமெரிக்கா & கனடாவில் குவியும் வழக்குகள்.!
டாபர் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ஹேர் ரீடைலர் பொருட்களால் கருப்பை புற்றுநோய் அபாயம்; அமெரிக்கா & கனடாவில் குவியும் வழக்குகள்.!
இந்தியாவில் தலைமையகத்தை கொண்டு செயல்பட்டு வரும் டாபர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தயாரிக்கும் ரசாயனங்கள் கொண்ட உரோம பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், அதனை பயன்படுத்துவோருக்கு கருப்பை புற்றுநோய் உட்பட பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக அமெரிக்காவில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
டாபர் அமைப்பின் துணை நிறுவனங்கள் மற்றும் நமஸ்தே லேபராட்ரி எல்எல்சி, டெர்மோவிவா ஸ்கின் எசன்ஷியல் ஐஎன்சி, டாபர் இன்டர்நெஷனல் லிமிடெட் நிறுவனங்களின் தயாரிப்புக்கு எதிராக இக்குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள மாநில அளவிலான நீதிமன்றங்களில், மேற்கூறிய நிறுவனங்களுக்கு எதிராக மொத்தமாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் புற்றுநோய் விளைவு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனங்கள் அங்கு வழக்கை எதிர்கொண்டு வருகின்றன.