அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ராம்போட அம்மா, அப்பாவின் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா..! இதோ.!
Donald trump parents photo
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது மனைவி மற்றும் மகளுடன் வந்துள்ள ட்ரம்ப் இன்று ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடுகிறார். ட்ரம்பின் இந்த வருகை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உலக நாடுகளுக்கே வல்லரசாக பார்க்கப்படும் அமெரிக்காவிற்கு அதிபராக இருக்கும் ட்ரம்ப் குறித்து சில முக்கிய தகவல்களை இங்கே பார்ப்போம். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் என்பதையும் தாண்டி அவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். உலகம் முழுவதும் பல கோடி கணக்கில் அவருக்கு சொத்துக்கள் உள்ளது.
1946 ஆம் ஆண்டு பிறந்த டிரம்ப் எக்கனாமிக் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தனது குடும்பத்தால் நடத்திவரப்பட்ட ரியல் எஸ்டேட் பிஸினஸை 1971 ஆம் ஆண்டில் இருந்து டிரம்ப் நிர்ணயித்து வருகிறார். ரியல் எஸ்டேட் மட்டும் இல்லாது பல்வேறு துறைகளை சார்ந்த தொழில்களையும் ட்ரம்ப் நடத்திவருகிறார்.
இவரது பெற்றோர் குறித்து பார்த்தோமேயானால், இவரது தந்தை பெயர் Fred Trump , தாய் பெயர் Mary Anne MacLeod என்பதாகும். இவருக்கு எலிசபெத் என்ற சகோதரியும், ராபர்ட் என்ற ஒரு சகோதரனும் உள்ளனர். தற்போது ட்ரம்பின் தாய் மற்றும் தந்தை புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அவர்களது புகைப்படம்.