இறுதி நேரம் குறித்த ட்ரம்ப்.. ஹமாஸுக்கு உச்சகட்ட எச்சரிக்கை..!
இறுதி நேரம் கொடுத்த ட்ரம்ப்.. ஹமாஸுக்கு உச்சகட்ட எச்சரிக்கை..!
வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேல் பிணையக்கைதிகள் விடுவிக்காத பட்சத்தில், ஹமாஸ் மிகப்பெரிய சுருதலை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் 07 அக். 2023 முதல் தொடர்ந்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு உட்பட உலக நாடுகளிடையே பதற்ற சூழல் இருக்கிறது.
இதையும் படிங்க: என்னங்க என்னைய விட்டு போகாதீங்க.. இரண்டாவது திருமணம் செய்த கணவனிடம் மனைவி இறுதி கெஞ்சல்.!
அமைதி ஒப்பந்தம்
இதனிடையே, அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளில் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், பிணையக்கைதிகளை இருதரப்பும் விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இறுதி எச்சரிக்கை
இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இஸ்ரேலிய பிணையக்கைதிகள் அனைவரையும் சனிக்கிழமை 12 மணிக்குள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு அனுப்பி வைக்காத பட்சத்தில், அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் நேரமாக அது கருதப்படும்.
சனிக்கிழமைக்குள் இஸ்ரேலிய பிணையக்கைதிகள் அனுப்பி வைக்கப்படாத பட்சத்தில், நரகத்தை காண்பிப்பேன். காலக்கெடு தொடர்பாக இஸ்ரேல் நாட்டின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமும் பேசவுள்ளேன்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: கரீபிய தீவுப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.!