×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது! இந்த ஒரு ஓவியத்தோட விலை மட்டும் இவ்வளவா? அப்படி என்னப்பா இருக்கு அதுல!!

drawing sold for 778 crores

Advertisement

பிரான்ஸ் நாட்டில் பிரபல ஓவியர் கிளாட் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

1890 ஆம் ஆண்டு ஓவியர் கிளாட் மொனெட் கிராமப்புற வாழ்க்கையை மையமாக கொண்டு அழகிய வைக்கோல்போர் ஓவியம் ஒன்றை வரைந்தார். அப்பொழுதே அந்த ஓவியம் பெருமளவில் பிரபலமடைந்தது.

இந்நிலையில் மீலெஸ் என பெயரிடப்பட்டஅந்த ஓவியம் சமீபத்தில்  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது.

மேலும்  ஏலம் தொடங்கிய முதல் 8 நிமிடங்களில் இந்த வைக்கோல்போர் ஓவியம் விலைபோனது. அதுமட்டுமின்றி யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் ஓவியம் இந்திய மதிப்பில் ரூ.778 கோடிக்கு ஏலம் போனது.



 

இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள்  வெளியானநிலையில், நெட்டிசன்கள் பெரும் வியப்படைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#drawing #crores #sales
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story