பிளாஸ்டிக் கேன்களை வைத்து டி-சர்ட் தயாரிப்பு.. அசத்தும் ஆடை நிறுவனம்.!
பிளாஸ்டிக் கேன்களை வைத்து டி-சர்ட் தயாரிப்பு.. அசத்தும் ஆடை நிறுவனம்.!
உலகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு என்பது அதிகரித்துள்ள நிலையில், அதன் தீய விளைவை உணர்ந்து அதனை கைவிடவேண்டிய கட்டாயத்தில் பல நாடுகள் உள்ளன. தற்போது வரை தயார் செய்யப்பட்டு பல்வேறு பரிணாமத்தில் நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி, மாற்று பொருளாக உபயோகிப்பது என பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில், துபாய் நாட்டினை சேர்ந்த டி-சர்ட் ஆடை தயாரிக்கும் நிறுவனம், பிளாஸ்டிக் கேன்களை பயன்படுத்தி ஆடைகளை தயாரித்து வருகிறது. மறுசுழற்சி முறையில் உருவாக்கப்படும் பிளாஸ்டிக்கை பஞ்சுபோல உருமாற்றி, அதனை கயிறுபோல திரித்து, பிளாஸ்டிக் உடைகளை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
பாலியஸ்டர் நூல் என்று அழைக்கப்படும் முறையில், பிளாஸ்டிக்கை பைபர் போல மாற்றி ஆடைகளை தயாரிப்பதால், சாதாரணமாக ஆடைகளை தயாரிக்க பயன்படும் மூலதன பொருட்செலவை விட இதற்கு குறைவான செலவு மட்டுமே ஆகிறது எனவும் அந்நிறுவன அதிகாரி தெரிவிக்கிறார். அந்நிறுவனம் சார்பாக அனைத்து உடைகளும் தயாரித்து வழங்கப்படுகின்றன.
இந்த உடையை தயாரிக்க சாதாரண ஆடை தயாரிக்கும் முறையில் இருந்து 50 % உற்பத்தி திறன் சேமிக்கப்படுகிறது. 20 % தண்ணீர் மற்றும் 55 % கார்பன் வெளியேற்றம் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.