மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையால்.. இந்தியாவுடனான வர்த்தகம் மேம்பட்டது.... ரஷ்யா தகவல்...!!
மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையால்.. இந்தியாவுடனான வர்த்தகம் மேம்பட்டது.... ரஷ்யா தகவல்...!!
ரஷ்யாவிற்கு, மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையால், நாங்கள் இந்தியாவுடனான வர்த்தகம் செய்ய காரணியாக அமைந்தது, என்று ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்த போரால் உலக நாடுகளின் எதிர்ப்பை ரஷியா எதிர்கொண்டது. இந்நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார தடையை கண்டு கொள்ளாத ரஷ்யா ஒரு வருடமாக போரை நீட்டித்து வருகிறது.
இந்த போரால், ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் சூடு பிடித்தது. 2022-ஆம் வருடம் இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு என ஆகியவற்றின் அடிப்படையில் பரஸ்பர வணிகம் மூவாயிரம் ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக இருந்தது.
இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையால், இந்தியாவுடன் நாங்கள் வர்த்தகம் செய்வதற்கான ஒரு காரணியாக அமைந்து விட்டது.
தேசிய கரன்சிகளின் அடிப்படையில் தொகைகளை பரிமாறி கொள்வது என இந்தியாவும் ரஷியாவும் முடிவு எடுத்தது. சுயசார்பு அடிப்படையில் போக்குவரத்து மற்றும் நிதி சார்ந்த கட்டமைப்புகளை வளர்த்து கொண்டோம் என கூறியுள்ளார்.
இந்த நிலையானது இந்த வருடமும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கு எண்ணெய் வினியோக அதிகரிப்பு குறித்த ரஷியாவின் திட்டம் என்ன என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், இந்தியாவுக்கு எவ்வளவு தேவையாக இருக்கிறதோ அவ்வளவு எண்ணெய்யை நாங்கள் தொடர்ந்து ஏற்றுமதி செய்வோம்.
மேலும் அந்நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எண்ணெய் சப்ளை இருக்கும். அதற்கான கோரிக்கைகளை தொடர்புடைய எங்களது நாட்டு நிறுவனங்கள் விரைவில் பூர்த்தி செய்யும் என்று கூறியுள்ளார்.