தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுரங்க வெடிபொருள் லாரி - 2 வீலர் மோதி அதிபயங்கர வெடிவிபத்து.. 17 பேர் உடல் சிதறி பலி.. 59 பேர் படுகாயம்.!

சுரங்க வெடிபொருள் லாரி - 2 வீலர் மோதி அதிபயங்கர வெடிவிபத்து.. 17 பேர் உடல் சிதறி பலி.. 59 பேர் படுகாயம்.!

East Africa Ghana Mine Explosive Lorry Two Wheeler Accident Massive Blast 17 Died 59 Injured Advertisement

சுரங்க வேலைக்கு வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில், 17 பேர் உடல் சிதறி பலியாகினர்.

கிழக்கு ஆப்ரிக்க நாட்டில் அமைந்துள்ள கானா நாட்டில், வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 59 பேர் படுகாயம் அடைந்தனர். 

கானா நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள தங்க சுரங்கத்திற்கு, சுரங்க வேலைக்கு தேவையான வெடிபொருட்களை ஏற்றி சென்ற லாரி சாலையில் சென்றுகொண்டு இருக்க, அவ்வழியாக அதிவேகத்துடன் வந்த இருசக்கர வாகனம் அதன் மீது மோதியுள்ளது.

East africa

இதனால் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில், சரக்கு லாரியில் இருந்த வெடிமருந்து வெப்பத்தில் எரிந்து வெடித்து சிதறியுள்ளது. 17 பேர் உடல்சிதறி பலியான நிலையில், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இந்த விபத்து அங்குள்ள சந்தைப்பகுதி அருகே நடந்த காரணத்தால், அப்பகுதியே முற்றிலும் சிதைந்து போனது. அருகில் இருந்த கட்டிடங்களில் சில தரைமட்டமானது. மீட்பு பணிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#East africa #Ghana #Mine Explosive #blast #accident #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story