கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதித்த எகிப்து நீதிமன்றம்!!
egypt-court-sentences-75-to-death
எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. கடந்த 2012 ஆம் ஆண்டு, முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கின் அதிபர் பதவியை முகமது மோர்சி கைப்பற்றினார்.
ஆனால், அவரது பிரிவினைவாத கொள்கைகள் அவருக்கு எதிராக திரும்பியதால் ஓர் ஆண்டிற்கு மேல் அந்தப் பதவியில் அவரால் நீடிக்க முடியவில்லை.
எகிப்து முன்னாள் அதிபா் முகமது மோர்சி பதவி நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டவா்களில் 75 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எகிப்தில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் முகமது மோர்சி வெற்றி பெற்றார். ஜனநாயக முறைப்படி தோ்வான முதல் எகிப்து அதிபா் என்ற பெருமையையும் மோர்சி பெற்றார். ஆனால் இவரது ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
போராட்டத்தைத் தொடா்ந்து இவரது ஆட்சி ராணுவத்தால் அகற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து மோர்சியின் கட்சியினா் வன்முறையில் ஈடுபட்டனா். 2013ம் ஆண்டு தெற்கு எகிப்தில் கொலை, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
வன்முறையில் ஈடுபட்டது தொடா்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பலருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.