எக்ஸ் வலைதளத்தின் வருமானம் அவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு.!
எக்ஸ் வலைதளத்தின் வருமானம் அவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.! எலான் மஸ்க் அறிவிப்பு.!
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது நொடிப்பொழுதில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் கோபமடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து கடுமையான தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
ஆறு வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலில் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்
நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உலக கோடீஸ்வரரும், எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் சீர்குலைந்த மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்