இனி இவர்கள் மட்டுமே ஆபாச படம் பார்க்க முடியும்! அரசு அதிரடி அறிவிப்பு!
England new orderd to watch videos in online
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. தொழிநுட்ப வளர்ச்சியில் மிக பெரிய பங்கு வகிப்பது தொலைபேசியும், இணையத்தளமும்தான். வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் அதை சார்ந்த குற்றங்களும் மறுபக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் முக்கியமான ஓன்று பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்.
இணையதளத்தில் கிடைக்கும் இலவச ஆபாச விடீயோக்களை பார்ப்பது, அதனால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது போன்ற செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க அணைத்து பாலியல் சம்மந்தமான இணையதளங்களை இந்திய அரசு சமீபத்தில் முடக்கியது. தற்போது இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது இங்கிலாந்து அரசாங்கம். இனி ஆபாச படங்களை பார்ப்பவர்கள் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் அல்லது அரசு சம்மந்தமான அடையாளை அட்டையை கொடுத்தால் மட்டுமே ஆபாச படம் பார்க்க முடியும் என கடந்த வருடம் அறிவித்திருந்தது.
தற்போது அதை நடைப்முறைப்படுத்தும் விதமாக இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. படம் பார்ப்பவர் 18 வயதை நிரம்பியவரா என அடையாளம் காணவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.