கொரோனவால் பாதிக்கப்பட்ட பிரதமர்! உடல்நிலை மோசமானதால் ஐசியூவிற்கு மாற்றம்!
england-pm-admitted-in-icu
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கர்ப்பிணி மனைவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் இங்கிலாந்து நாட்டில் சுமார் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. அவருக்கு மூச்சு விடுவதில் பெரிய அளவில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை சாதாரண வார்டில் இருந்து ஐசியூவில் மாற்றப்பட்டுள்ளார்.
பிரதமர் ஜான்சனுக்கு முன்பு, பிரிட்டனின் இளவரசர் சார்லசுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது அவர் குணமடைந்துவிட்டதாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.