10-16 வயது சிறார்கள் டார்கெட்.. ஆபாச படங்களை பார்த்து வாழ்க்கையில் பயம் கொள்ளும் சிறுவர்கள்.. ஆய்வில் பகீர்.!
10-16 வயது சிறார்கள் டார்கெட்.. ஆபாச படங்களை பார்த்து வாழ்க்கையில் பயம் கொள்ளும் சிறுவர்கள்.. ஆய்வில் பகீர்.!
நம்மிடையே இன்டர்நெட் அறிமுகம் செய்யப்பட்ட நாட்களில் இருந்து பல்வேறு வகையான நேரடி மற்றும் மறைமுக உளவியல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம். இதனால் எதிர்கால தலைமுறை நம்கண்முன் சீரழிவை சந்திப்பதும் நடக்கிறது.
இந்த நிலையில், இன்டர்நெட்டில் பெண் போல பேசி வாடிக்கையாளரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று மிரட்டி வரும் கும்பல், 10 வயது முதல் 16 வயதுடைய சிறுவர்களை அதிகளவு மிரட்டுவதாக தெரிய வருகிறது.
இது குறித்து இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் பகீர் தகவலானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்களுக்கு வாழ்க்கை குறித்த அச்சம், பதற்றம் போன்றவை ஏற்பட்டு மனநல பாதிப்பும் ஏற்படுகிறது.
மேலும், இது போன்ற செயல்களை தடுக்க, இனி பாலியல் மோசடி குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டப்பட்டுள்ளது.