கொரோனாவால் இறப்பிலும் இணை பிரியாத இரட்டை சகோதரிகள்.! நர்ஸ் பணியாற்றிய சகோதரிகள் மரணம்.!
England twin nurse sisters dead due to corono
கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய இங்கிலாந்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் கொரோனா வைரஸ் காரணமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றியவர்கள் கேட்டி டேவிஸ் மற்றும் எம்மா டேவிஸ் என்ற இரட்டை சகோதரிகள். தற்போது அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிவரும் நிலையியல், இரட்டை சகோதரிகள் இருவரும் கொரோனா நோயாளிகள் இருக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இன்முகத்துடன் பணியாற்றிவந்த இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவந்துள்ளது. இதனிடையே சிகிச்சை பலனின்றி சகோதரிகள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். ஒன்றாக பிறந்து, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே பணியில் இருந்த இரட்டை சகோதரிகள் கொரோனாவால் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை சகோதரிகளின் மரணம் குறித்து பேசியுள்ள அவர்களின் மற்றொரு சகோதரி, இருவரும் இந்த உலகிற்கு ஒன்றாகவே வந்தார்கள். தற்போது ஒன்றாகவே சென்றுவிட்டார்கள் என கண்ணீர்மல்க கூறியுள்ளார்.