×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெடித்து சிதறிய இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு... லண்டனில் பரபரப்பு...!

வெடித்து சிதறிய இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு... லண்டனில் பரபரப்பு...!

Advertisement

இரண்டாம் உலகப் போரின் போது பேசப்பட்ட வெடிகுண்டு, இங்கிலாந்து தலைநகர், லண்டனில் இருந்து சுமார் 90 மைல் தொலைவில் உள்ள நார்போக் என்ற நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது. 

இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் போது வெடித்து சிதறியது. இது சம்பந்தமான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகள் ஜெர்மனி மீது குண்டுகளை வீசின. ஜெர்மனியும் எதிரி நாடுகள் மீது பதிலுக்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இப்படி வீசப்பட்ட குண்டுகள் பல வெடிக்காத நிலையில், உலகம் முழுவதும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூட சில நேரங்களில் எத்தகைய வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. 

அவ்வாறு கண்டெடுக்கப்படும் வெடிகுண்டுகள் எந்த அசம்பாவிதமும் என்று செயலிழக்க வைக்கப்படுகின்றன. அந்த வகையில் அண்மையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 94 மைல் தொலைவில் உள்ள நார்போக் என்ற நகரத்தில்  கண்டறியப்பட்டது.

ராணுவ கருவி கிரேட் யார்மவுத் என்ற பகுதியில் வெடிகுண்டுகள் கிடந்ததை கண்டுபிடித்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் உடனடியாக அங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினார். 

இதை தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை ரோபோக்கள் மூலம் செயலிழக்க வைக்கும் பணி நடந்தது. அப்போது சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறியது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய வெடிகுண்டால் அந்தப் பகுதி ஒரு நிமிடம் அதிர்ந்தது. இதனால், யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படவில்லை. அந்தப் பகுதி சில நிமிடங்களில் புகை மண்டலம் போல் காட்சி அளித்தது. நார்போக் நகர காவல் துறை வெடிகுண்டு வெடித்த காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

இது குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு படை கூறும்போது, வெடுகுண்டை செயலிழக்க வைக்கும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் எந்த வித உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.

மேலும், வெடிகுண்டு வெடித்ததால் அங்கு ஏற்பட்ட பொருட்சேதம் குறித்து மதிப்பிட்டு வருகின்றோம். இதை மிகவும் கவனமாக கையாளப்பட்ட போதும் இந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. ஆற்றங்கரை ஓரம் இந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால் ஆற்றங்கரை சுவரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மதிப்பிடும் பணி நடக்க உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #london #Exploded World War II bomb
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story