தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்ற மகளை ஏலத்தில் விட்ட தந்தை!. தொகை எவ்வளவு தெரியுமா?

Father auctioned his daughter

Father auctioned his daughter Advertisement

தெற்கு சூடானில் பெரும்பாலும் "டிங்க" என்ற கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. டிங்க என்பது பெற்றோர் தங்கள் பெண்களை ஏலத்தில் விடுவார்களாம், அதில் இறுதியாக யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண் திருமணம் செய்து வைக்கப்படும்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய 17 வயது மகளை அங்கிருக்கும் தந்தை ஒருவர் ஏலத்தில் விட்டுள்ளார். இந்த ஏலத்தில் 6 பேர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தொழிலதிபர் ஒருவர் 500 மாடுகள், 3 விலையுயர்ந்த கார்கள் மற்றும் 1 மில்லியன் பணம் கொடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்ய ஏலத்தில் எடுத்துள்ளார்.

auction

இவர்களின் திருமணம் கடந்த 9-ஆம் தேதி  நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், அந்த பதிவில் பெண்ணின் வயது 17 என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

17 வயது பெண்ணை திருமணம் செய்து வைப்பதே தவறு, அதில் இதை பேஸ்புக் பக்கத்தில் போடுவதா என்று  சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் அந்த புகைப்படத்தை நீக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#auction #daughter #father
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story