×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10 வயது மகளை துடிதுடிக்க அடித்தே கொன்ற தந்தை! இதற்காகவா. ! வெளியான அதிர்ச்சி காரணம்!

Father killed 10 year daughter in iran

Advertisement

ஈரானை சேர்ந்தவர் ஹுசைன் அலெஃப்.  இவரது மகள் ஹாதிட் ஒர்ஜிலு. 10 வயது நிறைந்த இவரை, அவரது தந்தையான ஹுசைன் தனது பெல்ட்டால் கொடூரமாக அடித்து தாக்கி, அவரது ஜாக்கெட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

மேலும் அந்த சம்பவத்தை தொடர்ந்து ஹுசைன், அக்கம்பக்கத்தினரிடம் மகளை பெல்டால் அடித்துக் கொன்றால் என்ன தண்டனை கிடைக்கும் எனவும் விசாரித்துள்ளார். இந்நிலையில் சந்தேகமடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் நடந்த  குற்றத்தை கண்டறிந்தனர்.

மேலும் இதுகுறித்து ஹுசைனிடம்  போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சம்பவத்தன்று எனது மகள், எனது பேச்சை கேட்காமல், என்னை நோக்கி குரலை உயர்த்தி சத்தமாக  பேசினார். இந்நிலையில் ஒருகணம் எனக்கு கோபம் அதிகரித்த நிலையில்,  அதனை கட்டுப்படுத்த முடியாமல் தனது பெல்ட்டால் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார். 

மேலும் சில ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு, அதற்கான அபராத தொகையை கட்டிவிட்டு வந்துவிடலாம் என நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஈரானில் கொலை செய்தது பெரும் குற்றமாக கருதப்பட்டு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும், தந்தை மற்றும் பாதுகாவலர் கொலை செய்தால் அதற்கு விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#father #Murder #iran
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story