×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அசந்து தூங்கிக் கொண்டிருந்த மகள்! தலையை வெட்டிக் கொடூரமாக கொன்ற தந்தை! மனதை உலுக்கும் பகீர் சம்பவம்!

Father killed 13 year daughter at iran

Advertisement

ஈரான் வடக்கு மாகாணம் கிலனில் உள்ள தலேஷ் நகரில் வசித்து வந்தவர் அஷ்ரஃபி. 13 வயது நிறைந்த இவர் 34 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். மேலும் சமீபத்தில் தான் காதலிக்கும் நபருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை தனது மகளைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்த நிலையில் தீவிர தேடுதலுக்கு பிறகு சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி தனது தந்தையால் பாதுகாப்பு இல்லை என போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும்  தன்பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக்கூறியும், தனது தந்தையுடன் செல்ல மாட்டேன் என மறுப்பு தெரிவித்தும் போலீசார் கட்டாயப்படுத்தி அவரை தந்தையுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் இரவில் அஷ்ரஃபி அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது, தனது மகள் என்று கூட பாராமல் அவரது தந்தை அஷ்ரஃபியின் தலையை அரிவாளால் கொடூரமாக வெட்டி  கொலை செய்துள்ளார்.

பின்னர், மகளை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்துடன் அப்படியே காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி சரணடைந்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஈரானையே  உலுக்கியுள்ளது. மேலும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #iran #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story