உடலை கவ்விய மலைப்பாம்பு! வேலியில் தொங்கிக் கொண்டிருந்த மகன்! நடுநடுங்கிப் போய் தந்தை செய்த காரியம்!
father save son from python catch
ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் ஈவன் தாம்சன். இவரது மகன் கிளிப்போர்டு. இவர்கள் சமீபத்தில் புதுவீடு கட்டி, கிரக பிரவேசம் செய்துள்ளனர். இதனால் அவர்கள் வீட்டில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் அவரது மகன் கிளிப்போர்டு கதறித் துடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
உடனே பதறிப்போன ஓடி சென்று பார்த்தபோது கிளிப்போர்டு வேலியைபிடித்து தொங்கிக் கொண்டு இருந்துள்ளார். மேலும் அவனது காலை மலைப்பாம்பு ஒன்று கவ்வி விழுங்கி விட தீவிரமாக போராடி கொண்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியில் மூழ்கிய ஈவன் உடனே ஓடிப்போய் பாம்பின் தலையில் கடுமையாக அடித்துள்ளார். பாம்பு உடனே விடுவிக்க பின்னர் மீண்டும் உடலை இறுக்கி கவ்வியுள்ளது.
இந்நிலையில் தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்று ஈவன் பாம்பின் தலையைப் பிடித்து அதன் வாயை பலமாக பிளந்து தனது மகன் காலை வெளியே விடுத்துள்ளார். ஆனாலும் பாம்பு மீண்டும் மீண்டும் கிளிப்போர்ட்டையே பிடிக்க பாய்ந்துள்ளது. அந்த பாம்பின் வாலை பிடித்து ஈவன் இழுத்து வீசியும் பாம்பு குழந்தை இருக்கும் பக்கமே வந்துள்ளது. இந்நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் கையில் சுத்தியல் வைத்திருப்பதை கண்ட ஈவன் அதனை வாங்கி பாம்பின் தலையில் அடித்தே கொன்றுள்ளார்.
அதனை தொடர்ந்து கிளிப்போர்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரது காலில் பாம்பு கடித்த இடத்தில் கட்டுபோட்டும் இரத்தம் நிற்காமல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவனுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதனால் ஈவன் நடுநடுங்கிப் போய் உள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.