அடுத்தடுத்து பயங்கரம்.. துருக்கியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து பெரும் தீ விபத்து..!
அடுத்தடுத்து பயங்கரம்.. துருக்கியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து பெரும் தீ விபத்து..!
துருக்கி லெபனான் மற்றும் சிரியா, அதன் சுற்றுவட்டார நாடுகளில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் தற்போது வரை அங்கு 7,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையே நிலநடுக்கத்தை முன்னதாகவே யூகிதம் செய்து கூறிய டச் ஆய்வாளர் இந்தியாவிலும் விரைவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ,துருக்கியின் மத்திய தரைக்கடலில் உள்ள இஸ்கெண்டருன் துறைமுகத்தில் கண்டெய்னர்களில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
அத்துடன் நிலநடுக்கத்தால் கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஏதேனும் சேதமடைந்து தீப்பற்றி இருக்கலாம் என்று தெரியவரும் நிலையில், அதனை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.