4 வது மாடியில் மாட்டிக்கொண்ட தலை. அந்தரத்தில் தொங்கிய சிறுவன். சிறுவனை மீட்கும் திக் திக் காட்சிகள்.
Fire fighters rescue boy dangling from fourth floor window
சீனாவில் நான்காவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக அங்கிருந்த கம்பிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய காட்சியும், அதன்பின்னர் மீட்பு குழுவினர் அந்த சிறுவனும் மீட்க போராடும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கம்பிகளுக்கு நடுவே விழுந்ததில் அவனது தலை கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவனது தாத்தா அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்ததில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இரண்டு கம்பிகளுமான இடைவெளியை அதிகப்படுத்தி அந்த சிறுவனை பத்திரமாக மீட்டுள்னனர். இதோ அந்த வீடியோ காட்சிகள்.