இப்படியெல்லாமா மாஸ்க் போடுவீங்க!! ஒரே ஒரு மாஸ்க்காள் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு.. வீடியோ இதோ..
புது வித உள்ளாடை மாஸ்க்! உள்ளாடை மாஸ்க்காள் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு வீடியோ காட்சி....
உள்ளாடையை மாஸ்க்காக அணிந்திருந்த நபரை விமானத்தில் இருந்து இடக்கிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
புதிதாக ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த ஓமைக்ரான் வைரஸ் அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் உலக நாடுகள் முழுவதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மேலும் விமான பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவில் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் மாஸ்க் அணியாமல் உள்ளாடையை கொண்டு முகத்தை மறைத்தபடி விமானத்தில் இருந்ததால் அவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார்.
ஃபோர் லாடர்டேல் நகரிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைட்டட் விமானத்தில் ஆடம் ஜேன் என்ற பயணி ஒருவர் ஏறியுள்ளார். ஆடம் ஜேன் மாஸ்க் அணியாமல் , உள்ளாடையை கொண்டு முகத்தை மறைத்திருந்தார். இதைப்பார்த்த பணிப்பெண், “நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் கீழே இறக்கிவிடப்படுவீர்கள்” என கூற இருவருக்கும் இடையே சிறுது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் ஆடம் ஜேன் விமானத்தில் இருந்து கீழே இறங்க, அவருக்கு ஆதரவாக ஒரு சில பயணிகளும் இறங்கியதால் அங்கு பரபரப்பானது. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.