அச்சச்சோ.. 2 வருஷமா எவ்ளோ தண்ணீர் குடித்தாலும் சிறுநீரே வரலையாம்.. அவதிப்படும் பெண்மணி..!!
அச்சச்சோ.. 2 வருஷமா எவ்ளோ தண்ணீர் குடித்தாலும் சிறுநீரே வரலையாம்.. அவதிப்படும் பெண்மணி..!!
சிறுநீர் வெளியேறாமல் தவித்த பெண்மணிக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தீர்க்க முடியாத நோய் இருப்பது அம்பலமானது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரை சேர்ந்தவர் எல்லோ ஆடம்ஸ் (வயது 30). கடந்த 2020 ஆம் ஆண்டு வரை நலமாக இருந்த ஆடம்ஸ், திடீரென உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுள்ளார்.
அதாவது, அவர் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளார். இதனால் உடலில் அதிக நீர் தேங்கிய நிலையில், மருத்துவமனைக்கு சென்று அனுதியாகியுள்ளார்.
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு ஃபோல்டர் சிண்ட்ரோம் என்ற நோய் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து அவருக்கு தேவையான சிகிச்சை செய்த மருத்துவர்கள், வெளி இணைப்பு மூலமாக சிறுநீரை வெளியேற்றும் வசதி செய்து கொடுத்துள்ளனர்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக டியூப் மூலமாக அவர் சிறுநீரை வெளியேற்றி வருகிறார்.