சர்வதேச அரங்கில் அங்கீகாரம் பெற்ற ஹிந்தி; பிரான்ஸ் அதிபரின் அதிரடி ட்விட்.!
சர்வதேச அரங்கில் அங்கீகாரம் பெற்ற ஹிந்தி; பிரான்ஸ் அதிபரின் அதிரடி ட்விட்.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் உயரிய விருதும் முதல் முறையாக இந்திய பிரதமருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அந்நாட்டில் வசித்து வரும் இந்திய மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்யவும் வேண்டுகோள் வைத்திருந்தார். தனது பயணம் தொடர்பாக பிரதமர் ட்விட்டரில் பிரான்ஸ் அரசுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், "உலக வரலாற்றில் ஒரு மாபெரும், எதிர்காலத்தில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கும் நாடு, முக்கியமான பங்குதாரர், நண்பர் இந்தியா. இந்த ஆண்டு ஜூலை 14வது அணிவகுப்புக்கு கெளரவ விருந்தினராக இந்தியாவை வரவேற்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என ஹிந்தியில் ட்விட் பதிவு செய்துள்ளார்.
இந்த ட்விட் பதிவு வைரலாகியுள்ளது. இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து, அவர் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். ஆனால், பிரான்ஸ் அதிபர் தனது நட்புறவை இந்தியாவுடன் வளர்க்கும் பொருட்டு ஹிந்தியில் ட்விட் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஹிந்தி எதிர்ப்பு என்பது கடுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபரே ஹிந்தி மொழியில் ட்விட் செய்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.