தனது உயிரை கொடுத்து 81 பேருக்கு மறுஉயிர் கொடுத்த 10 வயது சிறுமி.! கண் கலங்க வைத்த இறுதி மரியாதை!! வைரலாகும் ஷாக் வீடியோ!!
Francine's Honor Walk for 10 year child
கலிபோனியா நாட்டில் வசித்து வந்தவர் ஹானா. இவரது மகள் பிரான்ஸின் சலாசர். சமீபத்தில் பள்ளியிலிருந்து தனது மகளை வீட்டிற்கு அழைத்து வர சென்ற ஹானா அவருக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க விரும்பியுள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் ஐஸ்க்ரீம் வாங்க சென்று கொண்டிருந்தபோது, பிரான்சிஸ் பெரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு பிரான்சின் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் விரைவில் இறந்து விடுவார் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த குடும்பத்தினர், இது குறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் சிறுமியின் இந்த தியாகத்தை போற்றும் வகையில், அவருக்கு அறுவை சிகிச்சை அறைக்கு செல்லும் வரை மருத்துவமனை ஊழியர்கள், உறவினர்கள் அனைவரும் வரிசையாக நின்று மனதார மரியாதை செலுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் 75 பேருக்கு உதவ முடியும் எனவும், 6 பேரின் உயிர் காப்பாற்றப்பட உள்ளது எனவும் உடலுறுப்பு தான அமைப்பு கூறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிகழ்வு பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.