வினோதமாக புகைப்படம் எடுத்ததால் விபரீதத்தில் சிக்கிய இளம்பெண்!
Girl affected seriously after photo with octopus
விளையாட்டாக ஆக்ட்டோபஸ்சை முகத்தில் வைத்து புகைப்படம் எடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணிற்கு முகத்தின் ஒரு பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
வாசிங்டனைச் சேர்ந்த ஜாமி பெசிகிலா என்ற பெண் கடற்கரை பகுதியில் நடைபெற்ற வினோதமான புகைப்படங்கள் என்ற போட்டியில் கலந்து கொண்டார். இவர் அந்தப் பகுதியில் இருந்த மீனவர்களுடன் வினோதமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
அப்போது மீனவர்கள் வைத்திருந்த விதவிதமான மீன்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அதில் ஒரு மீனவர் ஆக்டோபஸ் ஒன்றை வைத்திருப்பதை கண்ட பெண் அதனை வைத்து வினோதமாக ஒரு புகைப்படம் எடுக்கும் முடிவு செய்தார்.
ஆக்டோபஸை தனது முகத்தில் வைத்து அந்தப் பெண் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனை மகிழ்ச்சியாகவும் இணையத்தில் பகிர்ந்து விட்டார். ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு அவரது முகத்தின் ஒரு பகுதி மற்றும் கழுத்துப்பகுதியில் வீக்கம் உருவாகத் துவங்கியது.
மேலும் வீக்கம் அதிகரிக்க துவங்கி முகத்தின் ஒரு பகுதி முற்றிலும் உணர்வு இல்லாமல் போய்விட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.