நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களே உஷார் ...நகம் கடிப்பதால் விரலே போய்விடும்.!
girl lost her finger by the habit of nail biting
பிரிட்டனின் கவுண்டி துர்ஹாம் பகுதியை சேர்ந்தவர் விதோர்ன் வயது 20 . சிறு வயது முதலே நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்ட இவர் கல்லூரி படிக்கும் வயதிலும் இந்த நகம் கடிக்கும் பழக்கத்தை விடவில்லை.
இந்த நகம் கடிக்கும் பழக்கத்தால் தனது கட்டை விரலை இழந்ததோடு கேன்சர் நோயாலும் பாதிக்கப்பட்டு உள்ளார்.இவர் வலது கையில் உள்ள கட்டை விரலின் நகத்தை ஓயாமல் கடித்ததன் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த விரலானது தனது நிறத்தை மாற்றி கருப்பாக தோற்றமளித்தது.
அந்த விரல்களை கையுறை அணிந்து மறைத்து வைத்த அவர் தாங்க முடியாத வலியால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது விரலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் விரல் ஒரு வித கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கூறியுள்ளனர் . அவரது கட்டை விரலானது நான்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபின் சரியானது. இருந்தாலும் கேன்சரை முழுமையாக குணப்படுத்த இயலவில்லை.
தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரலை இழந்தாலும் உடல்நலத்தில் முன்னேறி வருகிறார்.