×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பச்சை வால் நட்சத்திரம்.... 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்குகிறது..!!

பச்சை வால் நட்சத்திரம்.... 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்குகிறது..!!

Advertisement

50 ஆயிரம் ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகில் வர இருக்கும் வால் நட்சத்திரம். 
இந்த வால் நட்சத்திரமானது, பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம், பூமிக்கு மிக அருகில் வர இருக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக கடந்த வருடம் மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். 

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இந்த அரிதான பச்சை வால் நட்சத்திரத்துக்கு சி/2022 இ3 (இசட்.டி.எம்.) என்று பெயரிட்டுள்ளது. வால் நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் பச்சை வால் நட்சத்திரம் வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று தெரிவித்துள்ளனர். 

பச்சை வால் நட்சத்திரத்தை பகல் நேரங்களில் பைனாக்குலர் மூலமாகவும், இரவில் வெறும் கண்களாலும் பார்க்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு, கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வந்ததாக கூறப்படுகிறது. 

சூரியனை சுற்றி ஒரு சுற்றுப்பாதையை கொண்டுள்ளது, இந்த பச்சை வால் நட்சத்திரம். இது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதிகள் வழியாக செல்வதால்,  பூமியை சுற்றி வர நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #American space agency NASA #Green comet #Approaches earth after 50 thousand years
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story