Breaking#: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்
Gunshoot at newzland
நியூசிலாந்தின், கிரிஸ்டசர்ச்சில் உள்ள மசூதி அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மசூதிக்கு சென்ற வந்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
வங்கதேச கிரிக்கெட் அணியானது நியூசிலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை கிரிஸ்சர்ச்சில் துவங்க உள்ளது.
இந்நிலையில் கிரிஸ்ட்சர்ச்சில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வங்கதேச வீரர்களில் சிலர் அருகில் இருந்த அல் அமூர் என்ற மசூதிக்கு தொலுகை செய்வதற்காக சென்றுள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி மதியம் 1.45 மணிக்கு மசூதி அருகே பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சராமாரியாக சுடும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு மசூதிக்குள் இருந்தவர்கள் அலறியுள்ளனர். மேலும் அந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்த பயங்கரவாத சம்பவத்தின் போது மசூதியின் உள்ளே இருந்ததால் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியயதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிம் இக்பால், ஸிரிநிவாஸ், முஸ்தாபீர் ரஹ்மான் ஆகியோர் தங்களது ட்விட்டர் பதிவில், "அல்லாஹ்வின் கிருபையால் இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்துள்ளோம். நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான். இந்த சம்பலத்தால் மனது மிகவும் பதைபதைக்கிறது. எல்லோரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளனர்.