உலகக்கோப்பை இறுதிப்போட்டி அன்று நடக்கப்போவது என்ன?. சீக்கிய பயங்கரவாதி இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை.!
உலகக்கோப்பை இறுதிப்போட்டி அன்று நடக்கப்போவது என்ன?. சீக்கிய பயங்கரவாதி இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை.!
இந்தியாவில் கொலை உட்பட பல குற்றச்செயல்களை புரிந்து விட்டு, போலியான பாஸ்போர்ட் மூலமாக கனடா தப்பிச்செல்லும் சீக்கிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள், அங்கிருந்து இந்தியாவுக்கு மிரட்டல் விடுப்பது சமீபத்தில் அதிகரித்து இருக்கிறது.
சீக்கிய அமைப்பை சேர்ந்த நபர்கள், பயங்கரவாத அடையாளத்தை பெற்றோர் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது காலிஸ்தான் அமைப்பினர் இந்தியாவுக்கு எதிராக பல பயங்கரவாத அச்சுறுத்தல் செயல்களை வெளிப்படையாக முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சீக்கிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், "வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஏர் இந்திய நிறுவனத்தை சீக்கியர்கள் பயன்படுத்த வேண்டாம். அன்றைய நாளில் ஏர் இந்தியாவை ஓட விடாமல் தடுக்க சர்வதேச அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இந்தியாவுக்கு நாம் யார் என்று காண்பிப்பதற்கு நேரம் வந்துவிட்டது" என்று அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசு விமான நிலையங்களில் இந்திய அளவில் பாதுகாப்பை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் உலகக்கோப்பை இறுதி போட்டி தொடரும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.