அடக்கொடுமையே! பிரபல நடிகரால்,பொறாமையில் மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவன்! வெளியான அதிர்ச்சி சம்பவம்!
husband killed wife for hruthik roshan
அமெரிக்கா நியூயார்க் பகுதியில் உள்ள குயின்ஸ் நகரில் வசித்து வருபவர் தினேஷ் பத்திதாட். இவர் மதுபான விடுதியில் வேலை செய்து வந்துள்ளார்.இவரது மனைவி டோனி டோஜாய். இந்திய தம்பதிகளான இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.
தோனி டோஜாய் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையாவார். மேலும் அவரது படம் வெளியாகும் அன்றே அவர் படத்தை பார்த்துவிடுவார்.அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த படங்களின் பாடல்களை மட்டுமே கேட்டுள்ளார். இந்நிலையில் தனது மனைவி தன்னை விட, நடிகர் ஹிருத்திக் ரோஷனை அதிகளவில் விரும்பியதால் அவருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தினேஷ்வர் கத்தியால் தனது மனைவியை குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது அக்காவிற்கு போன் செய்து, உனது தங்கையை கொன்றுவிட்டேன். வீட்டு சாவியை கீழே பூந்தொட்டியில் வைத்துள்ளேன் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரும் வீட்டிற்கு எதிரே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டோஜோயின் சகோதரி போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.