×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடுவானில் விமானத்தில் 6 மணி நேரமாக காதல் தம்பதியினர் செய்த காரியம்.! ஷாக்கான சக பயணிகள்!! புகைப்படம் இதோ!!

husband stand 6 hours for wife sleep

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் சமூகவலைத்தளங்கள் என்பது அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பயன்படுத்தும் ஒன்றாகும். அதில் பகிரப்படும் ஒரு சில தகவல்கள் முகம்சுளிக்கும்படியும், பல தகவல்கள் பயனுள்ளதாகவும் உண்மையான உறவுமுறையை உணர்த்தும் வகையிலும் உள்ளது.

இந்நிலையில் தற்போது விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஓடும் விமானத்தில் நபர் ஒருவர் தனது மனைவி  தூங்குவதற்காக தனது சீட்டை விடுத்து 6 மணி நேரமாக நின்றபடியே பயணம் செய்துள்ளார்.

வயதானாலும் இந்த காதல் ஜோடியில் அளவற்ற அன்பை கண்ட இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த கோட்னி லீ ஜான்சன் என்பவர் இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ஆறு மணி நேரம் நின்றுகொண்டிருந்த கணவர்; நிம்மதியாக உறங்கிய மனைவி. இதுதான் காதல் என பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட நெட்டிசன்கள் அவர்களது காதலை மெய்சிலிரித்து பாராட்டி வருகின்றனர். மேலும் பலர் அவரது மனைவியை கணவருக்கு கஷ்டம் கொடுத்துவிட்டார் சுயநலமிக்கவர் என விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Love #sleeping #flight
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story