10 வயது மகனை பட்டினி போட்டு கொன்ற கொடூர தாய்: காரணம் என்ன?.. மெலிந்த தேகத்துடன் மீட்கப்பட்ட உடல்.!
10 வயது மகனை பட்டினி போட்டு கொன்ற கொடூர தாய்: காரணம் என்ன?.. மெலிந்த தேகத்துடன் மீட்கப்பட்ட உடல்.!
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா, மோரிஸ்வில்லா பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்மணி பிரியங்கா திவாரி (வயது 33).
கடந்த புதன்கிழமை பெண்மணி அமெரிக்காவின் அவசர அழைப்பு 911 க்கு தொடர்பு கொண்டு, தனது 10 வயது மகன் பேச்சு மூச்சின்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர், சிறுவனின் உடலை பரிசோதனை செய்தபோது, சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உயிரிழந்து இருக்கலாம் என்பதை உறுதி செய்தனர்.
விஷயம் குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணை செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சிறுவனுக்கு தாய் உணவு கூட கொடுக்காமல் இருந்ததால், சிறுவனின் தேகம் மெலிந்து உயிர் பறிபோனது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாகவே பெண்மணி தனது குழந்தையை சரிவர கவனித்துக்கொள்ளவும் இல்லை என்பதும் உறுதியானது.
உண்மையை அறிந்த அதிகாரிகள் பெண்ணுக்கு எதிராக வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.