தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாக்குவாதத்தில் விபரீதம்; கோடரியால் தந்தையை கொடூரமாக கொன்ற 33 வயது மகள்.!

வாக்குவாதத்தில் விபரீதம்; கோடரியால் தந்தையை கொடூரமாக கொன்ற 33 வயது மகள்.!

in America Seattle 33 Year Old Daughter Kills Father  Advertisement

 

தந்தை - மகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மகள், தனது தந்தையை கோடரியால் வெட்டிக் கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் செயல்படும் ப்ளூ ஆரிஜினில் விண்வெளி நிறுவனத்தில், பயிற்சி மேலாளராக பணியாற்றி வருபவர் கோரி பர்க் (வயது 33). இவர் தனது தாய்-தந்தையுடன் வசித்து வருகிறார். கோரியின் தந்தை டிமோத்தி பர்கே (வயது 67). கோரி பர்க் பவர் லெஸ்பியன் எனவும் அறியப்படுகிறார். 

இதையும் படிங்க: 13 வயது சிறுவனை பள்ளியில் வைத்து சீரழித்த 43 வயது ஆசிரியை; அதிர்ச்சியில் பெற்றோர்.!

இவர் சிந்தாந்த ரீதியாகவும் ஓரினசேர்க்கை ஈடுபாடு கொண்டவர் எனவும், பொருளாதார பின்னணி கொண்டவரும் ஆவார். அதனாலேயே அவர் பவர் லெஸ்பியன் என அழைக்கப்படுகிறார். சம்பவத்தன்று இவர்கள் குடும்பத்துடன் வீட்டில் இருந்த நிலையில், டிமோத்தி வீட்டின் மின் விளக்குகளை அணைக்க கூறியுள்ளார்.

World news

கொலை சம்பவம் அம்பலம்

இந்த விஷயம் தொடர்பாக தந்தை - மகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதமானது மோதலில் முடிந்து, மகள் தனது தந்தையை கோடரியால் கொடுரமாக தாக்கி கொலை செய்துள்ளார். இரத்தம் தெரிந்த முகத்துடன் வெளியே வந்த பெண்ணை கண்ட அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், உண்மை அம்பலமானது. இதனால் கோரியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தற்போது அவர் பல கோடிகள் அபராதம் செலுத்தி சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இம்மாத இறுதியில் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

 

இதையும் படிங்க: ஷாவோலின் கோவிலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய சிறார்கள்; வியக்க வைக்கும் வீடியோ.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #America #father #daughter #Murder #கோடரியால் வெட்டிக்கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story