கலிபோர்னியா காட்டுத்தீ; 16 பேர் மரணம்..! பதறவைக்கும் காட்சிகள்.!!
கலிபோர்னியா காட்டுத்தீ; 16 பேர் மரணம்..! பதறவைக்கும் காட்சிகள்.!!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பல பகுதிகளில் பிடித்த காட்டுத்தீ, மிகப்பெரிய பொருட்சேத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 37,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்ள்ள நிலையில், 12,000 கட்டுமானங்கள் அழிந்துள்ளன.
காட்டுத்தீயில் சிக்கி மரணம்
153,000 பேர் முக்கிய நகரங்களில், பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னதாக 13 பேர் பலியாகி இருந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசர கால நிலையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: சொந்த மகள்களை சீரழித்த தந்தை; ஆத்திரத்தில் தீவைத்து கொளுத்தி கொன்ற மகள்கள்..!
முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களின் காட்டுத்தீ தொடர்பான காணொளி வெளியாகி காண்போரை பதறவைத்தது. திரும்பும் திசையெல்லாம் காட்டுத்தீ எரிந்து, நரகத்தின் வாயிலா? என உலகளவில் கேள்வியை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
காட்டுத்தீயில் சிக்கிய நாய்கள் மீட்கப்படும் காட்சிகள்