மாதவிடாய் வலியால் துடித்த பெண்ணுக்கு மாத்திரை வாங்கிக்கொடுத்த ஸ்விக்கி ஊழியர்; நெகிழவைத்த தருணம்.!
மாதவிடாய் வலியால் துடித்த பெண்ணுக்கு மாத்திரை வாங்கிக்கொடுத்த ஸ்விக்கி ஊழியர்; நெகிழவைத்த தருணம்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியை சேர்ந்த பெண்மணி நந்தினி டேங்க் என்ற நந்தினி ரவிதா. இவர் சம்பவத்தன்று மாதவிடாய் நாளை எதிர்கொண்டுள்ளார். அச்சமயம் சீரற்ற மாதவிடாய் காரணமாக கடுமையான வயிற்று வலியை அனுபவித்துள்ளார்.
இதனால் வீட்டில் சமைக்காமல் ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்த நிலையில், உணவு டெலிவரி செய்ய வந்த நபரிடம் தனது நிலையை எடுத்துரைத்து மருந்துகளை வாங்கி வர கோரிக்கை வைத்துள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட நபரும், பெண்ணுக்கு உதவி செய்து இருக்கிறார். ஸ்விக்கி நிறுவன ஊழியரால் உணவுடன் மாத்திரையையும் பெற்றுக்கொண்ட பெண்மணி, தனது மனதார பாராட்டுகளை தெரிவித்தார். இதனை ட்விட்டரிலும் பதிவிட, தற்போது அப்பதிவு வைரலாகி வருகிறது.