உடலை தூய்மைப்படுத்த தவளை பானம்; வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு நடிகை பலி.. மதபோதகர் பரிதாபங்கள்.!
உடலை தூய்மைப்படுத்த தவளை பானம்; வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு நடிகை பலி.. மதபோதகர் பரிதாபங்கள்.!
மதபோதகரின் பேச்சைக்கேட்டு நடந்த நடிகை, தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய முன்னணி நடிகை Marcela Alcázar Rodríguez. இவர் Jesús Costly என்ற மதபோதகரின் பின்தொடர்பாளர் என கூறப்படுகிறது. மதபோதகவர் நடிகையிடம் உடலை சுத்தப்படுத்த வேண்டும் என கூறி இருக்கிறார்.
உடல்நலக்குறைவால் அவதி
இதற்காக தான் அமேசான் காடுகளில் இருந்து, அரியவகை தவளையின் நீரை சேகரித்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி தவளையின் மூலமாக தயாரிக்கப்பட்ட பானத்தை குடித்த நடிகை, தீவிர உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெடிகுண்டை விளையாட்டுப்பொருளாக நினைத்ததால் சோகம்; 3 குழந்தைகள் பரிதாப பலி.!
வாந்தி-வயிற்றுப்போக்கு
முகம், உதடு பகுதிகளில் வீக்கம், உடலில் ஆங்காங்கே கொப்பளம், தீவிர தலைசுற்றல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவ்வதிப்பட்ட நடிகை, கடுமையான வாந்தியும் எடுத்து துள்ளத்துடிக்க உயிரிழந்தார்.
மதபோதகரின் செயல்
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், மதபோதகரான Jesús Costly மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். விசாரணையில், மதபோதகர் Jesús Costly மெக்சிகோ பகுதிகளில் இதேபோல பலருக்கும் தவளையின் பானத்தை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
உடலை தூய்மைப்படுத்த வேண்டும் என மதபோதகர் கொடுத்த பானத்தை சுமார் 30 க்கும் மேற்பட்ட முறை நடிகை குடித்ததால், அது ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாம்பு கடித்த நபரை காப்பாற்றாமல் தீவிர பிரார்த்தனை; பரிதாபமாக உயிரிழந்த பெண்.!