கடமான் முட்டி 70 வயது முதியவர் பலி; குட்டியுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது சோகம்.!
கடமான் முட்டி 70 வயது முதியவர் பலி; குட்டியுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது சோகம்.!
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா பகுதியை சேர்ந்தவர் டேல் சொர்மன் (வயது 70). இவர் சம்பவத்தன்று அங்குள்ள பகுதிகளில் வளரும் கடமான் (Moose) குட்டி ஈன்றதை பார்த்துள்ளார்.
போட்டோ எடுக்க முயற்சித்து சோகம்
இதனையடுத்து, இரண்டு குட்டிகளுடன் அவர் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது, தாய் கடமான் டேலை தாக்கி இருக்கிறது. இதனால் நிலைகுலைந்து விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: இறந்த மனைவியின் உடலை 4 நாள் பிணவறையில் வைத்த கணவன்.. கண்ணீர் தரும் காரணம்.!
விலங்குகளிடம் அலட்சியம் வேண்டாம்
மேலும், அவருடன் இருந்த மற்றொரு நபர் அதிஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர்தப்பினார். இந்த விஷயம் தொடர்பாக தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விலங்குகளை பொறுத்தவரையில் அவற்றுக்கு பால் ஊற்றி வளர்த்தாலும், குட்டிகளை ஈன்ற சில மணிநேரம் அவை பயத்தின் காரணமாக நன்கு பழகிய நபர்களை கூட யோசித்துதான் அனுமதிக்கும். சில நேரங்களில் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்பதால் விலங்குகள் விஷயத்தில் கவனம் வேண்டும்.
இதையும் படிங்க: உலக வரலாற்றில் முதல் முறை.. டாக்டர் பட்டம் பெற்ற பூனை.. வியக்கவைக்கும் தகவல் இதோ.!