மடியில் கொட்டிய டீ.. ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!
மடியில் கொட்டிய டீ.. ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில், பிப்.2020 அன்று இளைஞர் தேநீர் வாங்கினார். அவர் காரில் இருந்தபடி தேநீர் வாங்கியபோது, எதிர்பாராத விதமாக சூடான தேநீர் அவரின் மடியில் ஊற்றியது.
அந்தரங்க பகுதிகளில் சூடு காயம்
இந்த சம்பவத்தில் அவரின் தொடை மற்றும் அந்தரங்க பகுதிகள் காயமடைந்தன. இதற்காக மருத்துவமனையில் அனுமதியான இளைஞர் மைக்கேல் கெல்சியா, இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: மும்பை, காஷ்மீர் தாக்குதலுக்கு மூளை: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை.!
இழப்பீடு வழங்க உத்தரவு
இந்த மனுவை விசாரணை செய்த தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்ற நீதிபதிகள், இளைஞருக்கு 50 மில்லியன் டாலர் (ரூ.431 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளது.
இதையும் படிங்க: ஹமாஸ் குழுவுக்கு ஆதரவு; அமெரிக்காவில் உயர்கல்வி வாய்ப்பை இழந்து வெளியேறிய இந்திய மாணவி.!