மிரட்டும் சுனாமி! இந்தோனேசியாவில் 291 பேர் பலி
indonasia tsunami 220 death and 800 persons injury
இந்தோனேசியாவில் நேற்று எரிமலை வெடித்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி பலி எண்ணிக்கை 220 ஆக உயர்ந்திருப்பதாகவும். 800 பேர் காயமடைந்திருப்பதாகவும் மேலும் பலரை தேடும் பணியில் உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நேற்று அதிகாலை இந்தோனேசியாவின் சண்டா ஸ்டெரெய்ட் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்தது. எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வெளிவந்ததை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. சுமத்ரா தீவு, ஜாவா கடற்கரைக்கு இடையே ஏற்பட்ட பயங்கரமான சுனாமியால் கடற்கரைக்கு அருகே உள்ள பகுதிகளைச் சோ்ந்த 220 போ் பலியாகி உள்ளனர்.
மேலும், 800 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பலரது நிலை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணி தீவீரமாக முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடா் மீட்பு படையினா் தொிவித்துள்ளனா்.
2004 டிசம்பர் 26 அன்று இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோரங்களில் ஏற்பட்ட சுனாமி பயங்கரமான பேரழிவை கொடுத்தது. இன்றும் அனைவரின் மனதை விட்டு நீங்காத நிலையில் இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளார்கள்.