#BigBreaking: இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
#BigBreaking: இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
உலகம் முழுவதும் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்தோனேஷியாவில் உள்ள எரிமலை வெடித்து சிதறிய நிலையில், மறுநாள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டன.
எரிமலை வெடிப்பினால் மட்டும் 13 பேர் உயிரிழந்த நிலையில், நிலநடுக்கத்தால் பெருமளவு உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் மௌமரேவி பகுதியில் இருந்து 90 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக ஏற்பட்டுள்ள நிலநடுக்க அளவினால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என, பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்தோனேஷியா கடல் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் அவசர கதிகளில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.