சரக்கு முக்கியம் டோய்.. நிலநடுக்கத்தின் அதிர்விலும், சரக்கை பத்திரப்படுத்திய நபர்.. வைரலாகும் காணொளி.!!
சரக்கு முக்கியம் டோய்.. நிலநடுக்கத்தின் அதிர்விலும், சரக்கை பத்திரப்படுத்திய நபர்.. வைரலாகும் காணொளி.!!
இந்தோனேஷியா நாடு எரிமலைகள் நிறைந்த பகுதியாகும். கடந்த 2004 ஆம் வருடம் இங்குள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி ஏற்பட்டு அந்நாடு மட்டுமல்லாது இந்தியா வரை மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று இந்தோனேஷியாவில் உள்ள தீவுப்பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானதால், நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தாழ்வான கடற்கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் உயரமான இடங்களை நோக்கி பதற்றத்துடன் பயணித்து வருகின்றனர். சுமார் 1000 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையானது அமெரிக்க நிலநடுக்கவியல் ஆய்வு மையத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த பலரும் அவசரகதியில் கட்டிடங்களில் இருந்து வெளியேறும் பதைபதைப்பு விடீயோக்களும் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், நபரொருவர் மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள மதுபானத்தை பத்திரமாக பிடித்துக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ எப்போது, யாரால் எடுக்கப்பட்ட வீடியோ என்பது குறித்த விபரம் இல்லை என்றாலும், இந்தோனேஷியா நிலநடுக்கத்தை தொடர்ந்து சமூக வலைதளவாசிகளால் அதிகளவு வீடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது.