பெண்களின் முன்னேற்றத்திற்கு கேள்விக்குறியாகும் ஈரான்.. பள்ளி சிறுமிகள் மீது தொடரும் கெமிக்கல் தாக்குதல்கள்.!
பெண்களின் முன்னேற்றத்திற்கு கேள்விக்குறியாகும் ஈரான்.. பள்ளி சிறுமிகள் மீது தொடரும் கெமிக்கல் தாக்குதல்கள்.!
இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் ஈரான் நாட்டில், தீவிரமான இஸ்லாமிய சட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு சரியாக ஹிஜாப் அணியாத பெண்மணி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறை வளாகத்தில் மர்ம மரணம் அடைந்தார்.
அவரை அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாக அந்நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையில், அங்கு பெண்களின் உரிமையில் பல விரோதங்கள் நடந்து, பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், அங்குள்ள பெண்கள் பயின்று வரும் கல்வி நிறுவனங்களில் கெமிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பல செய்திகள் வெளியான வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது அங்குள்ள பல நகரங்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த செய்தி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.