சரிவர உடையணியவில்லை என பெண்ணை 100 பேர் சேர்ந்து தாக்கிய பயங்கரம்; ஈராக்கில் கொடூரம்.. பதைபதைப்பு வீடியோ வெளியானது.!
சரிவர உடையணியவில்லை என பெண்ணை 100 பேர் சேர்ந்து தாக்கிய பயங்கரம்; ஈராக்கில் கொடூரம்.. பதைபதைப்பு வீடியோ வெளியானது.!
ஈராக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான அநீதிகள் உச்சம்பெற தொடங்கியுள்ளது. அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தனிமனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஈராக் நாட்டில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்ட பெண்மணி, சரிவர உடை அணியவில்லை என்று கூறி அவரை 100 இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் நிலைமையை உணர்ந்து அங்கிருந்து செல்ல முயற்சித்த பெண்ணை மறித்து கும்பலாக தாக்கியுள்ளனர். 100 பேர் துரத்தி 16 பேர் கும்பல் இந்நிகழ்வை அரங்கேற்றி இருக்கிறது. இந்த சம்பவம் உலகளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.