×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Return & Exchange கிடையாது.. கணவர் விற்பனைக்கு..! மனைவியின் பகீர் விளம்பரம்.. 12 பெண்கள் கவலை..!

Return & Exchange கிடையாது.. கணவர் விற்பனைக்கு..! மனைவியின் பகீர் விளம்பரம்.. 12 பெண்கள் கவலை..!

Advertisement

அயர்லாந்து நாட்டில் வசித்து வருபவர் ஜான். இவரின் மனைவி லிண்டா மெக் அலிஸ்டர். தம்பதிகள் இருவருக்கும் ரைடர் என்ற 6 வயது மகனும், கோல்ட் என்ற 4 வயது மகனும் பிள்ளைகளாக உள்ளனர். இந்த தம்பதிகள் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் செய்த நிலையில், லிண்டா தனது கணவரை ஆன்லைனில் ஏலத்திற்கு விட்டுள்ளார். 

இதுகுறித்த தகவலை அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யவே, லிண்டாவின் கணவரை வாங்குவதற்கு 12 பெண்கள் விருப்பமும் தெரிவித்துள்ளனர். தனது கணவர் 2 குழந்தையுடன் மீன் பிடிக்க வெளியே சென்ற நேரத்தில், லிண்டா இவ்வாறான விளம்பரத்தை செய்துள்ளார். 

மேலும், கணவரின் உயரம், வயது, அவரின் விருப்பம், குணம் போன்றவற்றை தெரிவித்து, அவரை வாங்கும் பெண்களிடம் விசுவாசத்துடன் செயல்படுவார். சில விஷயங்களில் பயிற்சி வேண்டும் என்றாலும், அதற்கு பொறுமை மற்றும் நேரம் இல்லை. விற்பனை இறுதியானது. ரிட்டன் மற்றும் எக்சேஞ்சுக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்தனத்துடன் மனைவி செய்த குறும்பு வைரலாகவே, 12 பெண்கள் ஏலத்தில் பங்கேற்று வாங்கவும் முயற்சி செய்துள்ளனர். இந்திய தொகையின் படி, ரூ.5 ஆயிரம் வரை ஏலம் சென்ற நிலையில், தங்களின் வர்த்தக விதிகள் மீறப்பட்டுள்ளது என Trade Me இணையம் பதிவை நீக்கியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ireland #woman #Husband #Exchange #return #world #Irish Woman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story