இஸ்ரேல் படைகளின் பாலியல் அத்துமீறலை மறக்க முடியுமா? - எரியும் போரில் எண்ணெய் ஊற்றிய வரலாற்று ஆசிரியர்.!
இஸ்ரேல் படைகளின் பாலியல் அத்துமீறலை மறக்க முடியுமா? - எரியும் போரில் எண்ணெய் ஊற்றிய வரலாற்று ஆசிரியர்.!
அக்.07 ம் தேதி முதல் இஸ்ரேல் அரசை எதிர்த்து, பாலஸ்தீனியத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு, வரலாற்றில் இருந்த தனது பூர்வீக நிலத்தை மீட்க செல்வதாக திடீர் போர் அறிவித்து தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் நகரை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள், எல்லைவழியே ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு இஸ்ரேலுக்கு முதலில் மரண அடியை தந்தனர். பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கிய குழந்தைகள் முதல் அனைவரும் கொடூரமாக தலையை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
சில இடங்களில் பாலியல் ரீதியான வன்முறையும் இஸ்ரேலிய சேர்ந்த யூத மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனையடுத்து, பதில் தாக்குதலில் களமிறங்கிய இஸ்ரேல் அரசு, தனது முழு இராணுவ பலத்தையும் களமிறங்கியது.
ஹமாஸை போல திடீர் தாக்குதல் நடத்தாமல், காசா நகரில் குண்டு மழைகள் பொழியப்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுங்கள் என எச்சரித்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இருதரப்பு சண்டையில் இஸ்ரேல் தரப்பில் இராணுவ வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 1500 பேர் மட்டுமே உயிரிழந்து இருக்கின்றனர். ஆனால், பாலஸ்தீனியத்தில் 12 ஆயிரத்தை பலி எண்ணிக்கை நெருங்கியது.
ஹமாஸின் செயல் பாலஸ்தீனிய அப்பாவி பொதுமக்களை நேரடியாக பாதித்து, அவர்கள் ஐ.நா முகாம்களில் உயிரை கையில் பிடித்து தங்கி இருக்கின்றனர். இஸ்ரேல் அரசு ஹமாஸை ஒட்டுமொத்தமாக அழிக்காமல், எங்கள் தாக்குதல் ஓயாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உட்பட பல நாடுகள் இருக்கின்றன. ஹமாஸுக்கு ஆதரவாக ஈராக், ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இருக்கின்றன. இந்தியா உட்பட பல நாடுகள் பாலஸ்தீனிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்து வருகிறார்கள்.
அமெரிக்கா போரின் தீவிரத்தை புரிந்துகொண்டு, ஹமாஸுக்கு எதிரான தாக்குதலுக்கு இராணுவ தளவாடங்கள் வழங்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலை சேர்ந்த பள்ளி ஆசிரியர், மாணவர்கள் குழுவில் சர்ச்சை தகவலை பதிவிட்டு பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது, 1940க்கு பின் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள், பாலஸ்தீனிய பெண்களை பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தற்போது பதில் தாக்குதல் நடத்தப்படுகிறது எனவும், அதனை அவர்கள் எப்படி மறுப்பார்கள் எனவும் சர்ச்சைக்குரிய வகையில் தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
வரலாற்று ஆசிரியரின் சர்ச்சை பதிவு தொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும் அவரை பணியில் இருந்து நீக்கி இருக்கிறது.