இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 17 பிணையக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்.. விபரம் இதோ.!
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 17 பிணையக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்.. விபரம் இதோ.!
அக்.07ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர் தொடருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்ட பிணையக்கைதிகளை விடுவிக்க வேண்டி, தற்காலிக ஒப்பந்தத்தின் பேரில் தாக்குதல்கள் இருதரப்பிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இஸ்ரேலின் வேட்டை மறைமுகமாக தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது. அதேவேளையில், ஹமாஸும் சுதாரிப்புடன் இருந்து வருகிறது.
இந்நிலையில், பிணையக்கைதிகளை விடுதலை இஸ்ரேல் அரசு உட்பட உலக நாடுகள் கேட்டுக்கொண்ட நிலையில், இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் 39 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இன்று இரண்டாவது கட்டமாக ஹமாஸ் பயங்கரவாதிகள் 17 பிணையக்கைதிகளை விடுதலை செய்துள்ளனர். இவர்களில் 13 பேர் இஸ்ரேலியர்கள், 4 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள்.
இப்போரில் தற்போது வரை இஸ்ரேல் தரப்பில் 1400 உயிரிழப்புகளும், பாலஸ்தீனியத்தின் தரப்பில் 14500 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. விடுதலை செய்யப்பட்ட இஸ்ரேலியர்கள், இஸ்ரேலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆனந்த கண்ணீரில் நனைந்துபோயினர்.