ரொம்ப ஆபத்தானது! தயவுசெய்து இதை செய்யுங்கள்! நடிகர் ஜாக்கிசான் வெளியிட்ட வீடியோ!
Jackie john post coronovirus awarness video
சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190 நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்தியாவிலும் கொரோனா பரவிய நிலையில் 3,376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ஜாக்கிசான் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அதில் அவர், இது மிகவும் கஷ்டமான காலம். நாம் அனைவரும், கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறோம். கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. இந்நிலையில் அனைவரும் உங்களுடைய வீட்டில், உங்கள் குடும்பத்தினருடன் இருங்கள். அரசின் கட்டுப்பாடுகளைக் கேட்டு நடங்கள்.
முக்கியமான தேவைகளுக்கு வெளியே செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்லுங்கள். அடிக்கடி கை கழுவுங்கள். மிகவும் வலிமையாகவும், பாதுகாப்பாகவும் வீட்டில் இருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நமக்கு காத்திருக்கிறது என ஜாக்கிஜான் கூறியுள்ளார்.