#Breaking: பயணிகள் விமானம் - இராணுவ விமானம் மோதி பயங்கர விபத்து; 300 பேரின் நிலை என்ன?.. ஜப்பானில் அதிர்ச்சி.!
#Breaking: பயணிகள் விமானம் - இராணுவ விமானம் மோதி பயங்கர விபத்து; 300 பேரின் நிலை என்ன?.. ஜப்பானில் அதிர்ச்சி.!
ஜப்பான் நாட்டில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், இன்று பயணிகள் விமானமும் - கடலோர கடற்படை விமானமும் மோதிக்கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு விமானங்களும் தீப்பிடித்து எரிந்த நிலையில், தரையிறங்கிய பயணிகள் விமானம் தன்னுள் பற்றிய தீயுடன் சில மீட்டர் தூரம் பயணம் செய்து நின்றது.
விமானம் 'C' என்ற ஓடுதளத்தில் நின்றதும், பயணிகள் அனைவரும் அவசர கதியில் வெளியேறினர். பயணிகள் விமானத்தில் 300 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
முதற்கட்ட தகவலின்படி இரண்டு விமானத்திலும் அதிகாரிகள் மற்றும் பயணிகள் என 379 பேர் இருந்ததாகவும், அவர்கள் பத்திரமாக மீட்கப்ட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.