#Breaking: ஜப்பான் நாட்டில் தொடர்ந்து 15 முறை அதிபயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!
#Breaking: ஜப்பான் நாட்டில் தொடர்ந்து 15 முறை அதிபயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!
ஜப்பான் நாடு நிலநடுத்தட்டுகளின் மீது அமைந்துள்ள காரணத்தால், அங்கு நிலநடுக்கம் என்பது அதிகளவு ஏற்படும் பொதுவான விஷயங்களில் ஒன்றாகும்.
அவ்வப்போது பெரிய அளவில் ஏற்படும் நிலநடுக்கத்தால் சேதம், சுனாமி போன்றவை ஏற்படும். கடந்த 2011ம் ஆண்டு செண்டாய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஏற்பட்ட சுனாமியின் பிடியில் சிக்கி கிட்டத்தட்ட 19 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், இன்று ஜப்பானில் உள்ள இசு (Izu Island) தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 6.6 புள்ளிகள் பதிவாகியுள்ளது.
இதனால் சுனாமி அபாயம் பெரிதளவில் இல்லை எனினும், 15 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது, கரையோர மக்கள் உயரமான பகுதிகளுக்கு உடனடியாக செல்ல அறிவுறுத்தியுள்ளது. 1 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும்பலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.