குறுக்கு வழியில் பயணிக்க வாய்ப்பிருந்தும் போகலையே - வியக்கவைக்கும் ஜப்பானியர்களின் ஒழுக்கம்.!
குறுக்கு வழியில் பயணிக்க வாய்ப்பிருந்தும் போகலையே - வியக்கவைக்கும் ஜப்பானியர்களின் ஒழுக்கம்.!
பசுபிக் பெருங்கடலில் கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். இந்நாட்டின் கலாச்சாரம் என்பது சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஒன்று ஆகும்.
ஜப்பானிய மக்களின் வாழ்வியல் பல சித்திர காணொளிகளால் சர்வதேச அளவில் வரவேற்கப்படுகிறது. 12.57 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பான், சர்வதேச அளவில் மிகவும் கட்டுப்பாடுகளை அதிகம் கடைபிடிக்கும் மக்கள் கொண்ட நாடு ஆகும்.
எறும்பை போல சுறுசுறுப்பு, விடாத உழைப்பு என அந்நாட்டு மக்கள் இயந்திரத்தன்மையுடன் வேலை பார்த்து வருகிறார்கள். இதனாலேயே அவர்கள் 145,937 சதுர மைல் பரப்பில் வாழும் சூழலிலும், பல பிரச்சனைகளை எதிர்கொண்டும் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருக்கின்றனர்.
ஜப்பானிய மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் செயல்படுபவர்கள் என்பது உலகறிந்த விஷயம் ஆகும். அதனை உறுதி செய்யும்பொருட்டு ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
படிக்கட்டு ஒன்றில் ஏறி பயணிக்கும் மக்கள், எதிர்திசையில் ஏறி பயணிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட்ட நெரிசலில் பொறுமையாக காத்திருந்து பயணம் செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.